×

வேளாண் சட்டத்திற்கு எதிராக திமுக தரப்பில் தொடர்ந்த வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் 12ல் விசாரணை

புதுடெல்லி: எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே விவசாயிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இயற்றப்பட்ட வேளாண் சட்டத்திற்கு எதிராக திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்துகிறது. இந்த ஆண்டு மழைக்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து ஜனாதிபதி ஒப்பதல் வழங்கியதால்  மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டு தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதில்  டெல்லி, அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் வேளாண் சடத்திற்கு எதிராக தீவிர போராட்டத்தை நடத்தி வருகின்றனர். குறிப்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தரப்பில் தமிழகம் முழுவதும் மிகப்பெரும் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் திமுக எம்பி திருச்சி சிவா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் மற்றும் வழக்கறிஞர் குமணன் ஆகியோர் கடந்த 30ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், “விவசாயிகளுக்கான அதிகாரம் மற்றும் பாதுகாப்பு என்பது முற்றிலும் பறிக்கப்படுகிறது. குறிப்பாக விவசாய விரோதச் சட்டங்களான விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் அதிகாரம் மற்றும் பாதுகாப்புச் 2020 சட்டம், விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம் 2020, அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, ஆகியவை முழுமையாக விவசாயிகளுக்கு எதிராக உள்ளது என்பதால் அதனை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டது. வேளாண் சட்டத்திற்கு எதிராக திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேற்கண்ட ரிட் மனு வரும் 12ம் தேதி அதாவது, திங்கட்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் ஒன்பதாவது வழக்காக விசாரணைக்கு வருகிறது.

Tags : DMK ,hearing ,Supreme Court , Agriculture, DMK, Case
× RELATED விளம்பரத்தில் குறிப்பிட்ட பகுதிகளை...