×

நாமக்கல் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் 2.40 கோடி மோசடி:செயலர் உள்பட 6 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல் அருகே 2.40 கோடி மோசடி தொடர்பாக, கூட்டுறவு சங்க செயலர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம்,  மல்லசமுத்திரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த  சங்க கணக்குகளை கூட்டுறவு துறை துணை பதிவாளர் வெங்கடாசலம், சமீபத்தில் ஆய்வு  செய்தார். இதில் 2012 முதல் 2016ம் ஆண்டு வரையிலான காலத்தில் 2.40 கோடி மோசடி செய்யப்பட்டது  கண்டுபிடிக்கப்பட்டது.  இதுகுறித்து அவர் நாமக்கல் மாவட்ட வணிக  குற்றப்புலனாய்வு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.

இதில் சங்க பணியாளர்கள் மற்றும் நிர்வாக  குழு உறுப்பினர்கள் என மொத்தம் 13 பேர், கூட்டு சேர்ந்து மோசடி செய்தது  தெரியவந்தது. இவர்கள் சங்கத்தில் இருந்து ₹2.40 கோடியை எடுத்து,  உறுப்பினர்களுக்கு பயிர்க்கடன் கொடுப்பதாக கூறி, மோசடியில்  ஈடுபட்டுள்ளனர்.  இதையடுத்து மோசடியில் ஈடுபட்டதாக சங்கத்தின் தற்போதைய  செயலர் ரவி (57), பணியாளர்கள் கதிர்வேல்(65), தங்கராஜ்(62),  காவுத்தன்(60), கம்பராயன்(64), தங்கவேல்(60) ஆகிய 6 பேரை நேற்று   போலீசார் கைது செய்தனர். மேலும், மோசடியில் தொடர்புடைய அதிமுகவை சேர்ந்த சங்கத்தின் முன்னாள்  தலைவர் சபரி உட்பட 7 பேரை தேடி வருகின்றனர்.

Tags : Namakkal , Namakkal, fraud, arrest
× RELATED வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு அசோலா தீவன உற்பத்தி குறித்து செயல் விளக்கம்