×

2 ஆண்டு சர்ச்சைக்குப் பின் அறிவிப்பு: அமெரிக்க பெண்ணுக்கு இலக்கிய நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்: அமெரிக்க பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் உயரிய விருதுகளில் ஒன்றன நோபல் பரிசு, கடந்த 5ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. முதல் நாள் மருத்துவம், 2வது நாள் இயற்பியல், 3வது நாள் வேதியியல் துறைக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞர் லூயிஸ் க்ளுக், இந்த பரிசை பெற்றுள்ளார்.

ஸ்வீடன் அகாடமி உறுப்பினர்கள் மீது பாலியல் சர்ச்சை மற்றும் நிதி மோசடி புகார்கள் கூறப்பட்டதால், அகாடமி உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த 2018ம் ஆண்டு முதல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. தற்போது, 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : American , Nobel Prize
× RELATED தனிமை வாழ்க்கைஉயிருக்கே ஆபத்து: உளவியல் ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை