×

அனைத்து பொருட்களுக்கும் அதிரடி ஆஃபர் அமேசான் விழாக்கால தள்ளுபடி விற்பனை: வரும் 17 முதல் கொண்டாட்டம்

சென்னை: அமேசான் விழாக்கால சிறப்பு தள்ளுபடி விற்பனை, வரும் 17ம் தேதி தொடங்குகிறது. இதில், மொபைல் போன், டிவி முதல் வீட்டு உபயோக பொருட்கள், பேஷன், அழகு சாதன பொருட்கள் வரை அனைத்தும் அதிரடி தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது. மொபைல் போன், டிவி உட்பட 900க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள் இந்த பண்டிகை விற்பனையில் அறிமுகமாகின்றன. அமேசான் நிறுவனம் ஆண்டுதோறும் விழாக்கால சிறப்பு தள்ளுபடி விற்பனையை நடத்தி வருகிறது. அமேசான் இணைய தளத்தில் 6.5 லட்சத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் கோடிக்கணக்கான பொருட்களை தள்ளுபடி விலையில் வழங்குகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை எளிதாக சேர்க்கும் வகையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் கடைகள், அமேசானில் இணைந்துள்ளன.

நவராத்திரி, துர்கா பூஜை, திருமண சீசன் மற்றும் தந்தேராஸ் உட்பட, தீபாவளி வரை பொருட்களை வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்து பலன் பெறலாம். அமேசான் பிசினஸ் மூலம் எம்எஸ்எம்இக்களும் மொத்த விற்பனையில் அதிக சேமிப்பை பெற முடியும். எச்டிஎப்சி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு 10% தள்ளுபடி, கிரெடிட், டெபிட் கார்டு மூலம் வட்டியில்லா இஎம்ஐ வசதியில் பொருட்களை வாங்கும் வசதி உண்டு. அமேசான்-பே யுபிஐ மூலம், 500 மதிப்பிலான பரிசுகளை அள்ளலாம். அமேசான் கிப்ட் கார்டு அனுப்பலாம். ஒவ்வொரு நாளும் புதிய டீல்கள் மூலம் அதிரடி சலுகைகள் கிடைக்கும். மேலும், அமேசான்-பே லேட்டர் மற்றும் அமேசான்-பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு, பஜாஜ் பின்சர்வ் மூலம் உங்கள் பட்ஜெட்டையும் தாண்டி பொருட்களை வாங்க முடியும். அமேசான் அலெக்சா மூலமும் பிரத்யேக டீல்கள் உண்டு. பிரைம் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரம் முன்பு, அதாவது அக்டோபர் 16 முதலே இந்த சலுகைகளை பெறலாம் என, அமேசான் இந்தியாவின் துணைத்தலைவர் மணீஷ் திவாரி தெரிவித்தார்.

Tags : Amazon ,Celebration , Amazon, discount, celebration
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்