×

பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் புதுமுகங்கள்

பாரிஸ்: பிரஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆண்கள், பெண்கள் ஒற்றையர் அரையிறுதிப் போட்டிக்கு முதல்முறையாக பல புதுமுகங்கள் தகுதிப் பெற்றுள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் ்பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஒன்றில்  உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா(3வது ரேங்க்), அர்ஜென்டீனா வீராங்கனை என் நாடியா போடோரோஸ்கா(131வது ரேங்க்) ஆகியோர் மோதினர். ஆரம்பம் முதலே அசத்தலாக விளையாடிய நாடியா 6-2, 6-4 என நேர் செட்களில் எலினாவை எளிதில் வீழ்த்தினார். இதன்மூலம் பிரஞ்ச் ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறும் எலினா ஸ்விடோலினா கனவு 3வது முறையாக கலைந்துள்ளது.
மற்றொரு காலியிறுதியில் போலாந்து வீராங்கனை  இகா ஸ்வியடெக்(54வது ரேங்க்), இத்தாலியின் மார்டினா டிரெவிசன்(159வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் இகா 6-3, 6-1 என்ற நேர் செட்களில் மார்டினாவை மண்ணை கவ்வ வைத்தார். இந்த வெற்றியின் மூலம் 19வயதான இகா அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில்  நாடியா-இகோ விளையாட உள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் காலியிறுதி ஒன்றில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்(1வது ரேங்க்), ஸ்பெயின் வீரர் பாப்லோ கார்ரேனோ பாஸ்டா(18வது ரேஙக்) ஆகியோர் மோதினர். அதில் முதல் செட்டை 4-6 என இழந்த நோவக் அடுத்த 3 செட்களை 6-2, 6-3, 6-4 என்ற கணக்கில்  கைப்பற்றினார். அதனால் 3-1 என்ற செட்களில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். மற்ெறாரு காலியிறுதியில்  கிரீஸ் வீரர் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ்(5வது ரேங்க்) 7-5, 6-2, 6-3 என நேர் செட்களில்    ரஷ்ய வீரர் ஆண்ரே ரூப்லேவை(12வது ரேங்க்) வீழ்த்தினார். அதனால் பிரஞ்ச் ஓபன் அரையிறுதிக்கு முதல்முறையாக முன்னேறியுள்ள சிட்சிபாஸ், அதில் ஜோகோவிச் உடன் மோத உள்ளார்.



Tags : Newcomers ,semifinals ,French Open , French, Open Tennis
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...