×

கொரோனா பீதியால் பஸ்சில் செல்ல அச்சம்: டூவீலர் உதிரிபாக விற்பனை 30% உயர்வு

சேலம்: தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இரு சக்கரங்களை பழுது பார்க்கும் ஒர்க்ஸ் ஷாப், இதை தவிர இரு சக்கர விற்பனை ெசய்யும் கம்பெனிகளில் ஒர்க்ஸ் ஷாப்புகள் செயல்பட்டு வருகிறது. இந்த ஒர்க்ஸ் ஷாப்பை நம்பி 2 முதல் 3 லட்சம் பேர் உள்ளனர். ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து கடந்த ஜூன் 15ம் தேதி தொழிற்சாலைகள்செயல்பட தொடங்கின. பஸ் போக்குவரத்து இல்லாததால், தொழிலாளர்கள் வேலைக்கு தங்களது இரு சக்கர வாகனங்கள் மற்்றும் சைக்கிள்களையும் அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் சாலையில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. சேலத்தை சேர்ந்த இருசக்கர வாகனங்கள் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனையாளர்கள் கூறியதாவது:
 கொரோனாவுக்கு முன்பு அதிகபட்சம் பத்து கிலோமீட்டர் மேல் செல்பவர்கள் 90 சதவீதம் பஸ்சையே பயன்படுத்தினர். மீதமுள்ள 10 சதவீதம் பேர் தான் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தினர். ஆனால் கொரோனாவுக்கு பிறகு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா தொற்று பயத்தால், பஸ்களில் பயணம் செய்ய பலர் தயக்கம் காட்டி வருகின்றனர்.

 உயிர் பயத்தில் செலவு ஆனாலும் சரி என்று அலுவலக வேலை, கட்டுமானம் உள்பட பல்வேறு ெதாழில்களுக்கு செல்பவர்கள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஒர்க்ஸ் ஷாப் கடைகளில் இரு சக்கர வாகனங்கள் பழுது பார்ப்பது அதிகரித்துள்ளது. அதேபோல் ஸ்பேர் பார்ட்ஸ் கடைகளில் டயர், டியூப், ஆயில், சீட்கவர், பிரேக், கிளட்ச் ஒயர், பிரேக் ஷூ, இன்டிகேட்டர், லைட் மற்றும் இன்ஜினுக்கு தேவையான பொருட்களின் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே வேளையில் ஒர்க்ஸ் ஷாப்புகளில் வாகனங்கள் பழுது பார்ப்பதும் அதிகரித்துள்ளது என்றனர்.

Tags : panic ,Corona , CORONA
× RELATED காரியாபட்டி அருகே பயங்கரம்: கல்குவாரி...