×

அமெரிக்க பெண் கவிஞர் லூயிஸ் க்ளக்கிற்கு 2020ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!!

ஸ்டோக்ஹோம் : உலகின் உயரிய விருது நோபல். பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு நோபல் விருதுகள் அளிக்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுகளின் அறிவிப்புகள் வெளிவர தொடங்கி விட்டன.  ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டோக்ஹோமிலிருந்து நோபல் பரிசை வென்றவர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகிகொண்டிருக்கிறது. இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஜர் பென் ரோஸ், ரிய்ன்ஹார்ட் கென்செல், ஆண்ட்ரியா கெஸ் கருந்துளைப் பற்றிய ஆய்வுக்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய அறிவிப்பில், வேதியியல் பிரிவுக்கான விருதாளர்கள் அறிவிக்கப்பட்டனர். வேதியியலுக்கான நோபல் பரிசை ஜெனிபர் ஏ.டெளட்னா, இம்மானுவே சார்பென்டியர் ஆகிய இரு பெண்களுக்கு வழங்கப்படுகிறது.இன்று, இலக்கியத்திற்கான நோபல் பரிசாக அமெரிக்க கவிஞர் லூயிஸூக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிழையில்லா கவித்துவக் குரலும், அழகும் பொருந்திய கவிதைகளுக்காக லீயிஸ் க்ளக்கிற்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

லூயிஸ் க்ளக்

லூயிஸ் க்ளக் 1943ம் ஆண்டில் நியூ யார்க்கில் பிறந்தவர். எழுத்துப் பணி போக யேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். 1968ஆம் ஆண்டில் இவர் ஏழுதிய முதல் தொகுப்பான ஃபர்ஸ்ட்பார்ன் நல்ல வரவேற்பை பெற்று அமெரிக்க இலக்கியத் துறையில் லூயிஸிற்கு முக்கிய இடத்தை பெற்று தந்தது.இவர் எழுதி 1992ஆம் ஆண்டில் வெளியான வைல்ட் ஐரிஸ் தொகுப்பிற்கு வெகுவான வரவேற்பு கிடைத்தது. இதுபோக அவரது அவெர்னோ (2006), ஃபைத்ஃபுல் அண்ட் விர்ச்சுவஸ் நைட் (2014) ஆகிய தொகுப்புகளுக்கு நோபல் தேர்வுக் குழு புகழாரம் சூட்டியுள்ளது.

அக்டோபர் 9 ல் அமைதிக்கான நோபல் பரிசும், அக். 10ம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது.அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரையில் காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடி வரும் கிரேட்டா துன்பர்க் பெயரும் பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.

Tags : Louis Kluk , American, female poet, Louis Klug, literature, Nobel Prize, Announcement
× RELATED நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு...