×

பெரியார் சிலையின்கீழ் நின்று படமெடுப்பது சட்ட விரோதமா? 3 காவலர்கள் இடமாற்றமாம்! நடப்பது அண்ணா ஆட்சியா? ஆச்சாரியார் ஆட்சியா? : கி.வீரமணி அறிக்கை

சென்னை : பெரியார் சிலையின்கீழ் நின்று படமெடுத்த  மூன்று காவலர்கள் இடமாற்றம் செய்துள்ளதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கை வருமாறு:

தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான  கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதியன்று கடலூரில் தந்தை பெரியார் சிலையின்கீழ் நின்று படமெடுத்துக் கொண்ட மூன்று காவல்துறையினர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழர்கள் கல்வி பெறவேண்டும், உத்தியோகம் பெறவேண்டும் என்பதற்காகப் பாடுபட்டவர் தந்தை பெரியார். நன்றி உணர்ச்சியோடு அவர் சிலையின்கீழ் நின்று அவர் பிறந்த நாளில் படமெடுப்பது பஞ்சமா பாதகமா? அண்ணா பெயரில் உள்ள ஆட்சியா? அல்லது இராஜாஜியின் ஆட்சியா? அல்லது பா.ஜ.க.வின் தொங்கு சதை ஆட் சியா?வெட்கம்! வெட்கம்!! மகாமகா வெட்கம்!!!
உடனடியாக அந்தக் காவலர்களின் இட மாற்ற உத்தரவு ரத்து செய்யப்படவேண்டும்.

Tags : Periyar ,guards ,Anna , Periyar statue, guards, relocation, K. Veeramani, report
× RELATED கனடாவில் உள்ள நூற்றாண்டு பழமை மிக்க...