×

வாகனங்களுக்கு விதி மீறி அனுமதி அரசுக்கு ரூ.4 கோடி இழப்பு; ஆர்.டி.ஓ அலுவலக சோதனையில் அம்பலம்

சென்னை: வாகனங்களுக்கு விதிகளை மீறி ஆர்.டி.ஓ அலுவலகங்களில் அனுமதி வழங்கியதால் அரசுக்கு ரூ.4 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது, ஆய்வில் அம்பலமாகியுள்ளது.தாம்பரம், சோழிங்கநல்லூர், அம்பத்தூர், சென்னை மேற்கு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகங்களில், வருவாய் கணக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், பஸ், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு அனுமதி வழங்கியதில், வாகன சட்ட விதிகளை பின்பற்றாமல், மீறி செயல்பட்டதால் ரூ.4 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதாவது, வணிக ரீதியான பயண்பாட்டிற்கு இயக்கப்படும் பஸ்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.500 வசூல் செய்யப்படுகிறது.பள்ளி, கல்லூரி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கும்போது ஒரு இருக்கைக்கு தலா 50 முதல் 100 ரூபாய் வரை அரசு வசூல் செய்கிறது. ஆனால் அறக்கட்டளையாக இயங்கி வரும் கல்லூரி, பள்ளிகளில் இயக்கப்படும் வாகனங்களுக்கு இதே கட்டணம் வசூல் செய்யக்கூடாது. அதனை கமர்சியல் வாகனத்தில் தான் சேர்க்க வேண்டும். அறக்கட்டளை வாகனங்களுக்கு, கல்வி நிலையங்களுக்கான சலுகை வழங்க கூடாது என்று உயர்நீதிமன்றம் கடந்த 2008ம் ஆண்டு உத்தரவிட்டது.  

ஆனால் தற்போது நடைபெற்ற ஆய்வில் அறக்கட்டளைகளுக்கு சொந்தமான 24 பஸ்கள், பள்ளி, கல்லூரிகள் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூ.500 செலுத்த வேண்டியதற்கு பதிலாக 400 சதவீதம் குறைவாக ரூ.50-100 மட்டுமே காலாண்டுக்கு ஒரு முறை செலுத்தி வருகின்றனர். இதனால் , அறக்கட்டளை பஸ்களுக்கு அனுமதி கொடுத்ததில் ரூ.21.15 லட்சம்  இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

இதேபோல், சேர் ஆட்டோக்கள் பொதுமக்கள் பயண்பாட்டுக்கு இயக்கப்பட்டு, சவாரிக்கு பயண்படுத்துவது என்றால் அந்த பிரிவில் ஒரு இருக்கைக்கு ரூ.3000 ஆயிரம் செலுத்த வேண்டும். ஆனால், பலர் சொந்த பயண்பாட்டுக்கு அதாவது ஒரு இருக்கைக்கு ரூ.500 செலுத்தி பதிவு செய்துவிட்டு, மற்றவைக்கு பயண்படுத்தி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால், சோதனை மேற்கொள்ளப்பட்ட ஆர் டி ஓகளில் நடத்தப்பட்ட ஆய்வில், விதிகளை மீறி வாகனங்களுக்கு அனுமதி வழங்கியதில் சுமார் ரூ. 4 கோடி வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.இந்த விவகாரம் சர்ச்சைய ஏற்படுத்தியுள்ளது.

Tags : entry ,state ,RTO , Vehicles, Violation, Government, Loss, RDO, Office, Inspection, Exposure
× RELATED உயர் ரத்த அழுத்த அபாயத்தில் இருந்த...