×

சட்டவிரோதக் காவல் மரணம் என புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் முழு உடற்கூராய்வையும் ஏன் வீடியோ பதிவு செய்யவில்லை?... ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: சட்டவிரோதக் காவல் மரணம் என புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் முழு உடற்கூராய்வையும் ஏன் வீடியோ பதிவு செய்யவில்லை? என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்தவர் சந்தோஷ் இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தனக்கு இரண்டு சகோதரர்கள். முதல் சகோதரர் இதயக்கனி, மற்றொருவார் ரமேஷ். இதயக்கனி என்பவர் எங்களது கிராமத்தில் உள்ள புனிதா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொள்கிறார். இது சம்மந்தமாக ஏற்பட்ட தகராறில் அடிப்படியில் பேரையூரை சேர்ந்த போலீசார் தனது மற்றோரு சகோதரரான ரமேஷை விசாரணைக்கு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

கடந்த செப்.16-ம் தேதி உதவி ஆய்வாளர்கள் இருவர் எங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அழைத்து சென்ற பின் எங்களது சகோதரர் ராகேஷ் வீடு திரும்பவில்லை. அன்று இரவே காவல் நிலையத்துக்கு மிக அருகில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக எங்களுக்கு தகவல் வந்தது. தகவலின் அடிப்படியில் அங்கு சென்று பார்க்கும் போது ரமேஷின் உடலில் பல்வேறு காயங்கள் இருந்தது. எனவே பேரையூர் காவல் நிலையத்தில் உள்ளவர்கள் தனது சகோதரரை விசாரணைக்கு அழைத்து சென்று அடித்து கொலை செய்துள்ளனர் எனவே இந்த தகவலை எங்களுக்கு தெரியாமல் உசிலம்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர கதியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் எனக்கு நீதி வேண்டும்.

மருத்துவ குழு அமைத்து முழுமையான வீடியோ பதிவு செய்து மறுபிரேதே பரிசோதனை நடத்த வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பல்வேறு காரணங்கள் எடுத்துரைக்கப்பட்டது. ஆனால் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக இந்த வழக்கில் சந்தேக மரணம் என்று வந்த பின்பு ஏன் பிரேத பரிசோதனையை 4 மணிக்கு மேல் நடத்த்தினார்கள் என்றும், அதே போல் அருகாமையில் மதுரை மருத்துவக் கல்லூரி உள்ளது. அதேபோல தேனி மருத்துவக்கல்லூரி உள்ளது.

மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லாமல் அவசர கதியில் உசிலம்பட்டியில் பிரேத பரிசோதனை நடத்துவதற்கான காரணம் என்ன? இவை அனைத்தும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது. ஒரு மாதம் கடந்த பின்னரும் பிரவாயில்லை இதற்கு மருத்துவ குழு ஒன்று அமைத்து தற்போது இறந்து போன ரமேஷின் உடலை நெல்லை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மறு உடற்கூறு ஆய்வு செய்யவும், அதனை முழுமையாக வீடியோ பதிவு செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : autopsy ,police death , Why the video did not record the entire autopsy when it was reported as an illegal police death? ... Icord Branch Question
× RELATED நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்...