×

இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி 13வது ஆண்டாக தொடர்ந்து முதலிடம்!!

டெல்லி : போர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் பட்டியலில்  ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் இருக்கிறார். போர்ப்ஸ் (Forbes) பத்திரிகை இந்தியாவின் ‛டாப்-100 பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் இருக்கிறார். மேலும் அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு தொடர்ந்து உயர்ந்து தற்போது 6 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. போர்ப்ஸ் பணக்கார இந்தியர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 13வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளார்.

இரண்டாம் இடத்தில் உள்ள கவுதம் அதானியின் சொத்து மதிப்பு  ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக உள்ளது. HCL  நிறுவனர் சிவ நாடார் மூன்றாம் இடத்தில் உள்ளார்.அவன்யூ சூப்பர்மார்க்கெட் நிறுவன உரிமையாளர் ராதாகிஷண் தமானி  4ம் இடத்திலும், இந்துஜா சகோதரர்கள் 5ம் இடத்திலும் உள்ளனர்.
சீரம் இந்தியா அதிபர் சைரஸ் பூனாவல்லா 6ம் இடத்திலும், பல்லோன்ஜி மிஸ்திரி, உதய் கோடக், கோத்ரெஜ் குடும்பம், லட்சுமி மித்தல் ஆகியோர் முறையே 7 முதல் 10 வரை இடங்களில் உள்ளனர்.

Tags : Mukesh Ambani ,Reliance ,India , India, Rich, List, Reliance Chairman, Mukesh Ambani, First
× RELATED முகேஷ் அம்பானி வீட்டு திருமண...