×

மழை பெய்தும் பலனில்லை வறண்டு கிடக்கும் கல்லட்டி அருவி

ஊட்டி: ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக நல்ல மழை  பெய்தபோதும் கல்லட்டி அருவியில் நீர் வரத்து குறைந்து வறண்டு போய்  காட்சியளிக்கிறது. ஊட்டியில் இருந்து முதுமலை செல்லும் மலைப்பாதையில் 15 கொண்டை ஊசி வளைவில் கல்லட்டி பகுதியில் அருவி ஒன்று உள்ளது. நீலகிரி வனக் கோட்டத்திற்குட்பட்ட சோலூர், காமராஜ் சாகர் அணை மற்றும்  தலைகுந்தா பகுதியில் மழை பெய்தால் இந்த நீர் வீழ்ச்சியில் தண்ணீர்  கொட்டும். வனப்பகுதிக்கு நடுவே நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து  கொட்டுவது தொலைவில் இருந்து பார்க்கும்போது ரம்மியமாக இருக்கும்.

மழை  காலம் முடிவடைந்தாலும், ஒரிரு மாதங்கள் அருவியில் நீர் கொட்டும்.  இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் நல்ல மழை  பெய்தது. மழை பொழிவு இருந்த சமயங்களில் கல்லட்டி அருவியில் நீர்வரத்து  இருந்தது. கடந்த 10 நாட்களாக மழையின்றி வெயிலான காலநிலை நிலவி  வரும் நிலையில் கல்லட்டி அருவியில் நீர்வரத்து குறைந்து வறண்டுபோய் வெறும்  பாறைகளாக காட்சியளிக்கிறது.

Tags : river , Rainy, dry, lying, waterfall
× RELATED நெல்லை அருகே கோயிலுக்கு வந்த போது பரிதாபம் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி