×

இ-பாஸ் கட்டாயம் வால்பாறைக்குள் தினமும் 400 வாகனம் மட்டுமே அனுமதி: சோதனைச்சாவடியில் கலெக்டர் ஆய்வு

ஆனைமலை: வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இ- பாஸ் முறை கட்டாயம் எனவும், ஒரு நாளைக்கு 400 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் கோவை கலெக்டர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம் வால்பாறைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் செல்வதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வால்பாறைக்கு சுற்றுலா செல்லும் வாகனங்களை கண்காணிக்க சுகாதாரத்துறை மூலம் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு செல்ல ஆர்வம் காட்டி வருவதால், தினமும் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து தொற்று அதிகரிப்பை தடுக்கும் வகையில் வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட கலெக்டர் ராஜாமணி அறிவித்தார். நேற்று அவர் ஆழியார் வனத்துறை சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கோவை மாவட்ட பகுதியில் உள்ள மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் சுய பாதுகாப்போடும், விழிப்புடனும் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க வால்பாறைக்கு சுற்றுலா வரும் வெளி மாவட்ட பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும். வால்பாறைக்குள் நாள் ஒன்றுக்கு 400 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். இவ்வாறு கலெக்டர் ராஜாமணி கூறினார்.

Tags : Valparai ,Collector inspection , E-Pass compulsory, within Valparai, vehicle, permit
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை