×

பழநியில் ஆர்டிஓ அலுவலகம் திறப்பு எப்போது?

பழநி: பழநியில் புதிய ஆர்டிஓ அலுவலகம் கட்டுமான பணிகள் முடிவடைந்தும், திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பழநியில் செயல்பட்டு வந்த மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் கடந்த 2017ம் ஆண்டு வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்டது. இதை தொடர்ந்து பழநி, ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள வாகனங்களுக்கு இங்கு பதிவு செய்தல் மற்றும் இதர பணிகள் நடந்து வருகின்றன. தற்போது வட்டார போக்குவரத்து அலுவலகம் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு போதிய இடவசதியில்லாத சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து சண்முகநதி புறவழிச்சாலையில் மருத்துவ நகர் எதிர்புறம் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடம் கட்டும் பணி துவங்கியது. சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய கட்டுமான பணி நிறைவடைந்துள்ளது. சிறிதளவு மின்இணைப்பு பணிகள் மட்டுமே பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதுவரை திறகக்ப்படவில்லை.  இதனால் கட்டிடம் தயாராகியும் திறப்பு விழா முடிவு செய்யப்படாததால், இடநெருக்கடியான கட்டிடத்திலேயே வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்படுகிறது. எனவே, புதிய ஆர்டிஓ அலுவலக பணிகளை விரைவில் முடித்து திறப்பு விழா காண வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : office opening ,RTO ,Palani , Palani, RTO, Office, Opening, When
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்