×

அஜித் பீல்லா இல்லப்பா? வடிவேலு பீல்லா: கேதர் ஜாதவ்-வை இணையதளத்தில் வறுத்து எடுக்கும் ஐபிஎல் ரசிகர்கள்.!!!

சென்னை: நடப்பு ஐ20 போட்டியின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களும்  இழந்து 167 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணியிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. போட்டியில் தோல்வியடைய காரணம் அணியின் வீரர் கேதர் ஜாதவ் தான் என்று  சென்னை அணியின் ரசிகர்கள், கேதர் ஜாதவ்-வை இணையத்தில் வறுத்து எடுக்கின்றனர்.

இதற்கு முக்கிய காரணம், கேதர் ஜாதவ் ஃபாம் அவுட் ஆகிவிட்டார் அவரை அணியில் எடுப்பதே வேஸ்டு என புலம்பி கொண்டு இருக்கையில் நேற்றைய ஆட்டத்தில் இக்கட்டான நிலையில் அவரையே களத்தின் இறக்கினார். அவர்  களமிறங்கிய நேரம் கூட சென்னை அணி வெற்றி பெரும் நிலையில் தான் இருந்தது. தன் மீதான விமர்சனங்களை எல்லாம் ஓரம்கட்ட போகிறார் ஜாதவ் என ஒரு ஓரத்தில் தோன்றியது. அவரும் களமிறங்கியதும் பீல்டர்களை நோட்டம் விட்டு  விரலை விட்டு எண்ணினார். ஆட்டத்தை கணித்துவிட்டார் இனி அதிரடிதான் என்று சென்னை ரசிகர்கள் நினைக்கையில் ஏதேதோ செய்தார். ஆனால் ரன் மட்டும் அடிக்கவில்லை. திடீரென பேட்டை மாற்றினார். இனியாவது சரவெடி  வெடிக்குமா என பார்த்தால் அணைந்து போனது அப்படியே இருந்தார் ஜாதவ்

டெஸ்ட் தொடரில் கூட கடைசி நேரத்தில் பேட்டை விசுருவார்கள். ஆனால் ஜாதவ் ஐபிஎல் டி20 இக்கட்டான நேரத்தில் ஒரு ஸ்டோக்கை வைத்து பார்வையாளர்களை கண்கலங்க செய்தார். இவரும் அடிக்கவில்லை அவரையும் அடிக்க  விடவில்லை என்பது போல நல்ல விளையாடும் ஜடேஜாவுக்கும் பேட்டிங் வாய்ப்பை கொடுக்காமல் நின்றார். சரி சிங்கிள் வேண்டாம் சிக்ஸர் தான் என நோக்கமாக நினைத்து கொண்டிருந்தனர் சிஎஸ்கே ரசிகர்கள். ஆனால், ஆனால், கேதர், 12  பந்துகளை சந்தித்து வெறும் 7 ரன்களை எடுத்து திரும்பினார். இதனால், சென்னை அணியும் தோல்வி அடைந்தது.

இதனால், சிஎஸ்கே ரசிகர்கள் தற்போது இணையதளத்தில் கேதர் ஜாதவ்-வை வறுத்து எடுத்து வருகின்றனர். டி20 போட்டியினை டெஸ்ட் போட்டி மாதிரி விளையாடி வருகிறார். கோடி கணக்கில் எடுக்கப்பட்டவர் எதற்க்கு உள்ளே இருக்கிறார்  என தெரியவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags : Ajith Pillai ,home ,fans ,Vadivelu Pillai ,IPL ,Kedar Jadhav , Is Ajith Pillai home? Vadivelu Pillai: IPL fans fry Kedar Jadhav on the internet !!!
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...