×

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழங்கள் செயல்படுவதாக யுஜிசி அறிவிப்பு... அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 8 பல்கலைக்கழங்கள் போலியானவை!!

டெல்லி : நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழங்கள் செயல்பட்டு வருவதாக பல்கலைக் கழக மானியக் குழுவான யுஜிசி தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் போலி பல்கலைக்கழகங்களை கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. அங்கு 8 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன.

மேலும், தலைநகர் டெல்லியில், யுனைடெட் நேஷனல் பல்கலைக்கழகம், ஒக்கேஷ்னல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 7 பல்கலைக்கழகங்களும், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 2, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் தலா ஒரு பல்கலைக்கழகம் போலி என யுஜிசி கூறியுள்ளது. போலி பல்கலைக்கழக வரிசையில், புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ போதி அகாடமியும் இணைந்துள்ளது.

இதுகுறித்து யூஜிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “யு.ஜி.சி. சட்டத்துக்கு முரணாக தற்போது 24 சுயபாணி, அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் செயல்பட்டுவருவது மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரியப்படுத்தப்படுகிறது. இதில் படித்த மாணவர்களின் சான்றிதழ்கள் செல்லாது. இவை எந்த பட்டத்தையும் வழங்க அதிகாரம் இல்லை, என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : universities ,UGC ,country ,Uttar Pradesh , Fake Universities, UGC, Notice, Uttar Pradesh, Fake
× RELATED CUET முதுநிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வுகள் முகமை..!!