×

உலகை உலுக்கிய ஆப்பிரிக்க சிறுவன்

நன்றி குங்குமம்

கொட்டும் மழையில் கரடுமுரடான கான்கிரீட் தரையில் பாலே நடனமாடி அசத்தியிருக்கிறான் ஆப்பிரிக்க சிறுவனான அந்தோணி மடு. காலணி அணியாமல் வெற்றுக்காலில் அவன் ஆடியதுதான் இதில் ஹைலைட். உடம்பை வில் போல வளைத்து ஆடிய மடுவின் பாலே நடன வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகிவிட்டது. 2 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து ஹார்ட்டின்களையும் லைக்குகளையும் தெறிக்கவிட்டுள்ளனர். ஹாலிவுட் பிரபலங்களின் ஹார்ட்டின்களும் பகிர்வுகளும் இதில் அடக்கம்.

மழையில் நடனமாடிய மடுவின் காட்டில் இப்போது பாராட்டு மழையும் பரிசுகளும் குவிகின்றன. பணக்காரர் ஒருவர் மடுவின் கல்விச் செலவு முழுவதையும், தான் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். அமெரிக்க பாலே நடனப்பள்ளி மடுவிற்கு ஸ்காலர்ஷிப் கொடுத்து கவுரவப்படுத்தியுள்ளது. விரைவில் அமெரிக்கா செல்லப்போகிறான் மடு. இப்போது மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயிருக்கிறான். ஆம்; அமெரிக்கா செல்வது மடுவின் பெருங்கனவு.

Tags : African ,world , The African boy who shook the world
× RELATED எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க...