×

ஐபிஎல் டி20: இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதல்

நடப்பு ஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் தொடர்களில் 2 அணிகளும் இதுவரை 14முறை மோதியுள்ளன. அவற்றில் ஐதராபாத் 10 முறையும், பஞ்சாப் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த 2 அணிகள் மோதிய போட்டிகளில் அதிகபட்சமாக ஐதராபாத் 212 ரன்னும், பஞ்சாப் 211 ரன்னும் எடுத்துள்ளன. குறைந்தபட்சமாக ஐதராபாத் 121 ரன்னும், பஞ்சாப் 119 ரன்னும் எடுத்தன.

அதுமட்டுமல்ல, இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் 3 போட்டிகளில் ஐதராபாத்தும், 2 போட்டிகளில் பஞ்சாப் அணியும் வென்றுள்ளன. நடப்பு சீசனில் 5 போட்டிகளில் விளையாடிய ஐதராபாத் 2 வெற்றி 3 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திலும், அதேபோல் 5 போட்டிகளில் விளையாடிய பஞ்சாப் ஒரே ஒரு வெற்றி, 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலும் உள்ளன.

Tags : IPL T20 ,clash ,Sunrisers Hyderabad ,Kings XI Punjab , IPL T20: Sunrisers Hyderabad clash with Kings XI Punjab today
× RELATED ஐபிஎல் டி 20 மும்பை-ஆர்சிபி மோதல்: 2வது வெற்றி யாருக்கு?