கேரள அரசின் விண்வெளி பூங்கா திட்டத்தில் பினராய் விஜயனுக்கு தெரிந்து தான் சொப்னாவுக்கு வேலை தரப்பட்டது: அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் தகவல்

திருவனந்தபுரம்: ‘கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு ெதரிந்துதான் சொப்னாவுக்கு அரசு பணி நியமனம் அளிக்கப்பட்டது,’ என்று தனது குற்றப்பத்திரிகையில் அமலாக்கத் துறை கூறியுள்ளது. தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா, சரித்குமார், சந்தீப் நாயர் உட்பட 6 பேர் ஜாமீன் கோரி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், சொப்னா, சரித்குமார், சந்தீப் நயார் ஆகியோருக்கு எதிராக தான் பதிவு செய்துள்ள வழக்குகளில் அமலாக்கத் துறை நேற்று தனது முதல் குற்ற பத்திரிகையை தாக்கல் செய்தது.

அதில் கூறியிருப்பதாவது: சொப்னா, சரித்குமார், சந்தீப்நாயர் ஆகிய 3 பேருக்கும் ஹவாலா பணம் சேகரிப்பதில் பங்கு உண்டு. இவர்கள் பல்ேவறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சொப்னாவுக்கும், ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. சொப்னாவுக்கு வங்கியில் சிவசங்கர்தான் லாக்கர் எடுக்க உதவியுள்ளார். இதற்கான வாட்ஸ் அப் தகவல் பரிமாற்ற ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சிவசங்கரின் சிபாரிசில் தான் சொப்னாவுக்கு கேரள அரசின் விண்வெளி பூங்கா திட்டத்தில் பணி வழங்கப்பட்டது.

முதல்வர் பினராய் விஜயனுக்கு தெரிந்தே தான் அவருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. சொப்னாவுடன் நிதி முறைகேடுகளில் சிவசங்கருக்கும் பங்கு உண்டு. அவருக்கு எதிராக ேமலும் தீவிர விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பைசல், ரபின்ஸ் கைது

கேரள தங்க கடத்தல் வழக்கில் 7வது முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள முகமது ஷாபின் ஜாமீன் மனு, என்ஐஏ நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, என்ஐஏ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், ‘தங்கம் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகளான பைசல் பரீத்தும், ரபின்ஸ் ஹமீதும் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்தான் துபாயில் இருந்து தூதரக பார்சல்கள் மூலம் தங்கத்தை திருவனந்தபுரத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர் இந்த வழக்கில் தொடர்புடைய சித்திக்குல் அக்பர், அகமது குட்டி, ரதீஷ், முகமது சமீர் ஆகியோர் இன்னும் தலைமறைவாகவே உள்ளனர். அவர்களை கைது செய்ய இன்டர்போல் உதவி நாடப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>