ராஜ்பவன் அருகே தீ விபத்து: 8 பேர் காயம்

புவனேஷ்வர்: ஒடிசாவில் ஆளுநர் மாளிகை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் காயமடைந்தனர். ஒடிசாவில் ஆளுநர் மாளிகை அருகே இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்க் இயங்கி வருகின்றது. இந்நிலையில் பெட்ரோல் பங்க்கில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த தீ விபத்தில் ஊழியர்கள் உட்பட 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 தீயணைப்பு துறை வாகனங்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

Related Stories: