×

இன்ஸ்பெக்டருக்கு கொரோனா

அண்ணாநகர்: அண்ணா நகர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்ணா நகர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கடந்த வாரம் காய்ச்சல், இருமல் மற்றும் சளியால் கடும் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில்  அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இவருடைய அறையை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்து பூட்டப்பட்டது. இவர் அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று பணியில் சேர்ந்த மூன்றே நாளில் கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Corona ,Inspector , Corona to the Inspector
× RELATED ஹாமில்டனுக்கு கொரோனா