உடல் நிலையில் முன்னேற்றம்; விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ்: மருத்துவமனை அறிவிப்பு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கதிரியக்க மதிப்பீடு செய்ததில் அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோவிட்-19 சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சீரான திட்டமிடப்பட்ட தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கதிரியக்க மதிப்பீடு செய்ததில் அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் கூடிய விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>