பண்ருட்டி அருகே அமைச்சர் பண்ணைக்கு மர்ம நபர்கள் தீவைப்பு

பண்ருட்டி: பண்ருட்டியில் அமைச்சர் சம்பத்தின் பசுமை குடில் பண்ணைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் ரூ.30 லட்சம் பொருட்கள் எரிந்து சாம்பலானது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கோட்லாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (64). இவர் மேல்குமாரமங்கலம் கிராமத்தில் உள்ள அமைச்சர் எம்.சி.சம்பத்தின் மகன் ப்ரவீனுக்கு சொந்தமான பசுமை குடில் பண்ணையில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலை பசுமை குடில் பண்ணைக்கு மர்மநபர்கள் தீ வைத்தது தெரியவந்தது. இதில், 4 ஏக்கரில் பிளாஸ்டிக் பைகளால் அமைக்கப்பட்டிருந்த பண்ணை மற்றும் சூரிய ஒளியை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த குடிலும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மேனேஜர் பிரபாகரன் கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.  

Related Stories:

>