ஸ்ரீரங்கம் கோயிலுக்கு கோவை யானை புதுவரவு

திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலுக்கு புதுவரவாக கோவை யானை நேற்று வந்தது. வைணத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டுதோறும் திருவிழா நடைபெற்று கொண்டே இருக்கும். இதில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்தது. தற்போது புரட்டாசி மாதத்தையொட்டி பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சுவாமிக்கு பூஜைகள் நடத்தவும், பக்தர்களுக்கு ஆசி வழங்கவும் கோயிலுக்கு சொந்தமாக 35 வயதான ஆண்டாள் யானை உள்ளது.

இந்நிலையில் கோயிலுக்கு மேலும் ஒரு யானை வாங்க கோயில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோவையில் தனியார் மில்லில் உள்ள கோயிலில் பராமரிக்கப்பட்டு வந்த 20 வயதான பிரேமி(எ)லட்சுமி யானையை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வழங்கினர். நேற்று ஸ்ரீரங்கத்துக்கு வந்த யானை பிரேமியை கொட்டகையில் தங்க வைத்துள்ளனர்.

Related Stories:

>