×

பிஇ கவுன்சலிங் இன்று தொடக்கம்: 1.12 லட்சம் இடங்களுக்கு ஆன்லைன் கவுன்சலிங்

சென்னை: பிஇ, பிடெக் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான பொதுப்பிரிவு கவுன்சலிங் இன்று தொடங்குகிறது. 1 லட்சத்து 12 ஆயிரம் இடங்களுக்கு ஆன்லைன் மூலம் கவுன்சலிங் நடக்கும் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள சுமார் 500 பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு பிஇ, பிடெக் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை 15ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி 1 லட்சத்து 60 ஆயிரத்து 834 பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். அவர்களில் பதிவுக் கட்டணம் செலுத்தியவர்கள் 1 லட்சத்து 31 ஆயிரம் பேர்.

சான்றிதழ்களை பதிவேற்றி சரிபார்க்கப்பட்டவர்கள் 1 லட்சத்து 15 ஆயிரம் பேர். தகுதியுள்ளவர்களாக 1 லட்சத்து 12 ஆயிரத்து 406 பேர் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, கடந்த 28ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அக்டோபர் 1ம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கவுன்சலிங் நடத்தப்பட்டது. முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்ட 150 இடங்களில் 134 பேரும், மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 6 ஆயிரத்து 500 இடங்களில் 107 பேரும், விளையாட்டு பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 500 இடங்களில் 357 பேர் மட்டுமே தங்களுக்கான இடங்களை தேர்வு செய்தனர். இதன்படி 6552 இடங்கள் காலி ஏற்பட்டுள்ளன.

மொத்தம் உள்ள 1 லட்சத்து 60 ஆயிரம் இடங்களில்  மேற்கண்ட இடங்கள் போக 1 லட்சத்து 59 ஆயிரம் இடங்கள் பொதுப்பிரிவு மற்றும் தொழில் கல்வி பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டு அவற்றுக்கு இன்று முதல் 15ம் தேதி வரை கவுன்சலிங் நடக்கிறது. மேற்கண்ட பொதுப்பிரிவினருக்கான இடங்களுடன், சிறப்பு பிரிவினருக்கான ஒதுக்கப்பட்ட இடங்களில் ஏற்பட்ட காலியிடங்களான 6552 இடங்களும் சேர்த்து நடத்தப்படும். இந்த பொதுப்பிரிவு கவுன்சலிங் முழுக்க முழுக்க ஆன்லைன் மூலம் 15ம் தேதி வரையும், தொழில் பிரிவினருக்கான கவுன்சலிங் 27ம் தேதி வரையும் நான்கு கட்டங்களாக நடக்கும். இந்த கவுன்சலிங்கில் 465 பொறியியல் கல்லூரிகள் பங்கேற்கின்றன.

பொதுப்பிரிவினருக்கான கவுன்சலிங்
* முதல் சுற்றில் 199.66 கட்ஆப் முதல் 175 கட்ஆப் வரை 12263 பேர் கவுன்சலிங்கில் பங்கேற்கின்றனர். இவர்கள் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை கவுன்சலிங் கட்டணம் செலுத்த வேண்டும். 12, 13ம் தேதிகளில் இடங்களை உறுதி செய்ய வேண்டும். 14ம் தேதி தற்காலிக இட ஒதுக்கீடுகள் வெளியிடப்படும். 16ம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

* இரண்டாம் சுற்று கவுன்சலிங்கில், 174.75 கட்ஆப் முதல் 145.5 கட்ஆப் வரையும் சுமார் 22 ஆயிரத்து 900 பேர் பங்கேற்கின்றனர். இவர்கள் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை கவுன்சலிங் கட்டணம் செலுத்த வேண்டும். 16ம் தேதி முதல் 17ம் தேதி வரை இடங்களை உறுதி செய்ய வேண்டும். 18ம் தேதி தற்காலிக இட ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டு 20ம் தேதி இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

* மூன்றாவது சுற்றில், 145 கட்ஆப் முதல் 111.75 கட்ஆப் வரையில் உள்ள சுமார் 35 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை இ ந்த  மாணவர்–்கள் கட்டணம் செலுத்த வேண்டும், 20 மற்றும் 21ம் தேதிகளில் இடங்களை உறுதி செய்ய வேண்டும். 22ம் தேதி தற்காலிக இட ஒதுக்கீட்டு பட்டியல் வெளியிடப்பட்டு, 24ம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

* நான்காவது சுற்றில், 111.5 கட் ஆப்
முதல் 77.5 கட்ஆப் வரை கவுன்சலிங் நடக்கும். இதில் சுமார் 40 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள். இவர்கள் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை கட்டணம் செலுத்த வேண்டும். 24 மற்றும் 25ம் தேதிகளில் இடங்களை உறுதி செய்ய வேண்டும். 26ம் தேதி தற்காலிக இட ஒதுக்கீட்டு பட்டியல் வெளியிடப்பட்டு, 28ம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

தொழில் பிரிவினருக்கான கவுன்சலிங்
* தொழில் பிரிவினருக்கான கவுன்சலிங்கில், 196.83 கட்ஆப் முதல் 87.5 கட் ஆப் வரை பெற்றவர்கள் 1533 பேர் கலந்து கொள்கின்றனர். 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை இவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். 12 மற்றும் 13ம் தேதிகளில் இடங்களை உறுதி செய்ய வேண்டும். 14ம் தேதி தற்காலிக பட்டியல் வெளியிடப்படும். 16ம் தேதி இறுதிப்பட்டியல் வெளியாகும்.

Tags : locations , PE Counseling starts today: Online counseling for 1.12 lakh locations
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு