×

புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உட்பட ஒன்பது மாநிலங்களில் 24 போலி பல்கலைகள்: யுஜிசி அறிவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் பல்கலைக் கழக மானியக்குழுவின் (யுஜிசி) கட்டுப்பாட்டில் உள்ளன. அதன் உத்தரவுப்படியே இவை செயல்படுகின்றன. இருப்பினும், அதன் கட்டுப்பாட்டையும் மீறி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போலி பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றை கண்டுபிடித்து, யுஜிசி அடிக்கடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் அடிப்படையில், நேற்று அது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு கொண்டிருக்கும் 24 பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்களை போலி என அதிரடியாக அறிவித்துள்ளது. இவற்றில் 8 பல்கலைக் கழகங்கள் உத்தர பிரதேசத்திலும், 7 பல்கலைக் கழகங்கள் தலைநகர் டெல்லியிலும் உள்ளன.

இது தவிர, ஒடிசா, மேற்கு வங்கத்தில் தலா 2 பல்கலைக் கழகங்கள், போலி என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் செயல்படும் தலா ஒரு பல்கலைக் கழகங்களும் போலி என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதுச்சேரியில் உள்ள ஸ்ரீபோதி அகாடமி உயர்கல்வி நிலையம், கேரளாவில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பல்கலைக் கழகம், கர்நாடகாவில் செயல்படும் பதக்னவி சர்கார் வேர்ல்டு திறந்தவெளி பல்கலைக் கழக கல்வி அறக்கட்டளை, ஆந்திராவில் உள்ள ஸ்ரீபோதி அகாடமி உயர்கல்வி நிறுவனம் ஆகியவை போலி என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Tags : universities ,states ,announcement ,Kerala ,UGC ,Pondicherry ,Karnataka , Pondicherry, Kerala, Karnataka, 24 fake universities, UGC
× RELATED CUET முதுநிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வுகள் முகமை..!!