×

35% பெண்களுக்கு இணைய அச்சுறுத்தல்: 22 நாடுகளில் நடத்திய ஆய்வில் பகீர் தகவல்

புதுடெல்லி: இந்தியா உட்பட உலகம் முழுவதும் 22 நாடுகளில் டிஎன்ஏ என்ற அமைப்பு, பெண்களுக்கு எதிரான இணைய அச்சுறுத்தல், வன்முறை, ஆபாச பதிவுகள் குறித்து ஆய்வு நடத்தியது. ஒவ்வொரு நாட்டிலிருந்தும் 15 முதல் 25 வயதுடைய  14,000க்கும் மேற்பட்ட பெண்கள் ஆய்வில் பங்கேற்றனர். இதில், 39% பெண்கள் பேஸ்புக் வழியாக தேவையற்ற செய்திகளையும் அழைப்புகளையும் சந்தித்ததாக தெரிவித்தனர். 29% பேர் இன்ஸ்டாகிராம் மூலம் தேவையற்ற சிக்கல்களை  சந்தித்துள்ளனர். வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்புவதன் மூலம் சுமார் 14% பெண்கள் இணைய அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர்.

மேலும், 10% பெண்கள் ஸ்னாப்சாட், 9% பெண்கள் டுவிட்டர், 6% பெண்கள் டிக் டாக் ஆகியவற்றால் இணைய வன்முறைக்கு ஆளாகி உள்ளனர். அதேபோல், 60% பெண்கள் சமூக வலைதளங்கள் மூலம்  வன்முறைக்கு ஆளாவதாக ஐக்கிய  நாடுகள் சபை தெரிவித்துள்ளது.  இதனால் கிட்டத்தட்ட 20% பெண்கள் தங்கள் சமூக வலைதள கணக்குகளை  நீக்கியுள்ளதாகவும், உலகளவில் 40 கோடிக்கும் அதிகமான பெண்கள் (35%) இணைய அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளதாகவும் அந்த  ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை டெல்லி மற்றும் பிற நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், இணையம் வழியாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 36% அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.டுள்ளது.

Tags : women ,countries ,Baqir , Internet threat to 35% of women: Pakir in a study of 22 countries
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ