×

திருமானூர், தா.பழூர் பகுதிகளில் வயல்களில் களை நெல்களை தடுக்க வாத்துகளை மேயவிடும் விவசாயிகள்

அரியலூர்: திருமானூர், தா.பழூர் பகுதிகளில் களை நெல்களை தடுக்க விவசாயிகள் வயல்களில் வாத்துகளை மேய விடுகின்றனர். வயலில் களை நெல்களை தடுக்க வாத்துகளை மேயவிடுவதால், நெல் சாகுபடி செய்யும் போது நிலத்தில் இருக்கும் பழைய ரக நெல்லை வாத்துக்கள் சாப்பிடுவதால் புதிதாக அடுத்த சாகுபடியின் போது கலப்பு நெல் வராமல் தடுக்க முடியும் என கூறும் விவசாயிகள். அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் மற்றும் தா.பழூர் பகுதியில் உள்ள 21 கிராம ஊராட்சிகள் டெல்டா பகுதி ஆகும். இந்த பகுதியில் காவிரி நீர் மற்றும் நிலத்தடி நீரைக்கொண்டு 21 கிராம ஊராட்சிகளில் முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது திருமழபாடி பகுதியில் விவசாயிகள் குறுவை சாகுபடியை அறுவடை செய்து, சம்பா சாகுபடிக்கு வயலை தயார் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் பழைய நெல் ரகங்களை சிந்தியிருக்கும் நிலையில், அவற்றுடன் அடுத்த சாகுபடி செய்தால் அந்த ரக நெல்லும் முளைத்து வரும் என்பதற்காக, விவசாயிகள் வாத்துகளை தங்கள் வயல்வெளிகளில் மேயவிட்டு வருகின்றனர். இதனால் டெல்டா பகுதிகளில் வாத்துக்கள் கூட்டம் கூட்டமாக வயலில் உள்ள பழைய நெல்மணிகளை உட்கொண்டு வருகின்றன. மேலும் புழு., பூச்சிகளையும் வாத்துகள் உண்பதால் அவற்றின் தாக்குதல் கட்டுபட்டுவதுடன், வாத்துகள் விடும் எச்சங்கள் நிலத்திற்கு உரமாகவும் மாறுகின்றன என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.



Tags : Dhaka ,Thirumanur , Farmers graze ducks to prevent weeds in fields in Thirumanur and Dhaka
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி