ஆம்பூர் அருகே உள்ள மருத்துவமனைக்குள் நுழைய முயன்ற10 அடி நீள மலைப்பாம்பு

ஆம்பூர்: ஆம்பூர் அருகே உள்ள நரியம்பட்டில் அரசினர் சமுதாய சுகாதார மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் பிரசவம் மற்றும் நோயாளிகள் வந்து செல்வது வழக்கம். இந்த மருத்துவமனையை சுற்றி அடர்ந்த செடி, கொடிகள் நிறைந்து புதர் காணப்படுகிறது.   நேற்றிரவு சுமார் 10 மணியளவில் மருத்துவமனைக்குள் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று நுழைய முயன்றது. இதனை அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் பார்த்து கூச்சலிட்டனர். தகவலறிந்த உமராபாத் போலீசார், உடனடியாக ஆம்பூர் வனசரகர் மூர்த்திக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனக்காப்பாளர்கள் ராஜ்குமார்,

சுல்தான் ஆகியோர் அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். அதனை சின்னவரிக்கம் ஊராட்சி பெங்களமூலை வனப்பகுதிக்கு கொண்டுசென்று விட்டனர். மருத்துவமனை அருகே உள்ள புதரில் ஏராளமான பாம்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பும் பாம்புகள் பிடிபட்டுள்ளது. எனவே புதரை அகற்றி  சுகாதார வளாகத்தை தூய்மைபடுத்தவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>