×

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல்; கொடைக்கானலுக்கு வேலை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வர துவங்கினர். துவக்கத்தில் வார விடுமுறைகளில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது. தற்போது கொடைக்கானலில் இதமான தட்பவெப்ப நிலை நிலவுவதால் வேலை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வர துவங்கியுள்ளனர். நேற்றும் கொடைக்கானலில்  சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். பிரையன்ட் பூங்கா உள்ளிட்ட 3 பூங்காக்களையும், கோக்கர்ஸ் வாக் பகுதியையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். 


Tags : Kodaikanal , Tourists congregate in Kodaikanal
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்