×

முகக்கவம் அணியாமல், சமூக இடைவெளியையும் பின்பற்றாதவர்களை கைது செய்தால் என்ன?; அபராத தொகையை ரூ.2,000 ஆக உயர்த்தினால் என்ன: ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி

சென்னை: முகக்கவம் அணியாமல், சமூக இடைவெளியையும் பின்பற்றாதவர்களை கைது செய்தால் என்ன? என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராத தொகையை ரூ.2,000 ஆக உயர்த்தினால் என்ன எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா வந்தால் தமது குடும்பத்திகர் பாதிக்கப்படுவர் என்பதை பொதுமக்கள் உணர்ந்து நடக்க வேண்டும் என ஐகோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது. கொரோனா நோய் பரவலைத் தடுக்க வேறு என்ன நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கொரோனா பரவலை தடுக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என அறிக்கை தர ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பியது. ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள தற்போதைய சூழலில் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்றவில்லை என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பேருந்துக்கள், ஆட்டோக்களில் அதிக அளவில் எண்ணிக்கையில் மக்கள் பயணம் செய்வதாக மனுதாரர் புகார் அளித்தார். கொரோனா  பரவலை தடுக்க அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்கவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Faceless, social break, non-followers, arrested, Madurai branch
× RELATED 3ம் கட்ட தேர்தல்களம் பரபரப்பாகிறது...