தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை அறிக்கை: விரைவில் வீடு திரும்புவார் என தகவல்

சென்னை: தேமுதிக தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மியாட் மருத்துவமனையில் சீரான தொடர் திட்டமிட்ட சிகிச்சைக்காக விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டு உள்ளார். விஜயகாந்த் 2வது கட்ட மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரது மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு இருவரும் குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து கடந்த 2ம் தேதி  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் விஜயகாந்த் குறித்து தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என கட்சி தலைமை தெரிவித்துள்ளது.

Related Stories:

>