×

கொரோனா’ முத்திரை நண்டு நர்மதாவுக்கு ஆபாச மிரட்டல் கடிதம்

அண்ணாநகர்,:அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் நண்டு நர்மதா (38). இவர் தன்னிச்சையாக பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன் அமைச்சரின் வீட்டுக்குள் நண்டு விடும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன் கோயம்பேட்டில் தமிழக பாஜ தலைவர் வீட்டின் முன்பு கட்சி கொடியை தூக்கில் தொங்கவிடும் போராட்டத்தில் ஈடுபட்டார். மேற்கண்ட 2 வழக்குகளிலும் நர்மதாவை போலீசார் கைது செய்து விடுதலை செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 29-ம் தேதி அண்ணாநகர் காவல் நிலையத்தில் போலீசாரை கண்டித்து நர்மதா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவர் போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அறிந்து கொள்ளாமல், அவரை எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து அண்ணாநகர் போலீசாரை கிண்டலடித்து சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ வெளியானது. இதையடுத்து நர்மதாமீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை நண்டு நர்மதா வீட்டுக்கு தபால் மூலமாக ஆபாச வார்த்தைகளால் திட்டி, ஒரு மிரட்டல் கடிதம் வந்திருக்கிறது. இதை பார்த்து நர்மதா அதிர்ச்சியானார்.

Tags : Corona ,Narmada , Corona, seal, crab Narmada
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...