×

2020-ம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு: இமானுவேல் சார்பென்டியர் ,ஜெனிபர் டௌட்னா ஆகிய 2 பெண் விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு.!!!

ஸ்வீடன்: ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட 6 துறைகளில் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளை கண்டுபிடித்து, மகத்தான சாதனை   படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது. பரிசு பெறும் ஒவ்வொருவருக்கும், தங்கப்பதக்கம், பட்டயம் மற்றும் பரிசுப் பணம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகளை  ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் கமிட்டியின் தலைவர் தாமஸ் பெர்ல்மன் கடந்த 4-ம் தேதி முதல் அறிவித்து வருகிறார். இதில், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்களை நேற்று அவர் அறிவித்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ரோஜர் பென்ரோஸ், ஆன்ட்ரியா கெஸ், பிரிட்டனை சேர்ந்த ரிய்ன்ஹார்ட் கென்செல் ஆகியோருக்கு 2020ம் ஆண்டின் இயற்பியல் நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்  தொடர்ந்து, இன்று, 2020-ம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இமானுவேல் சார்பென்டியர் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் டௌட்னா ஆகிய இருவருக்கு வேதியியல் நோபல் பரிசு  பிரித்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மரபுஅணு மாற்றம் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக 2 பெண் விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் வேதியியலுக்கான நோபல் பரிசு 5  பெண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், வரும் 8ம் தேதி இலக்கியம், 9ம் தேதி அமைதி, 10-ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.




Tags : scientists ,Announcement ,Emanuel Sarpentier ,Jennifer Doutna , Nobel Prize in Chemistry 2020: Announcement to 2 Female Scientists, Emanuel Sarpentier and Jennifer Doutna !!!
× RELATED பிளாக்பஸ்டர் பார்டர்-கவாஸ்கர் டிராபி:...