×

சட்டவிரோதமாக இயங்கும் தண்ணீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை: 19-ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு

சென்னை: சட்டவிரோதமாக இயங்கும் தண்ணீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு நவம்பர் 19-ம் தேதிக்குள் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு தண்ணீர் வாங்காத நிறுவனங்களையும் மூடலாம் எனவும் கூறியுள்ளது. நிலத்தடி நீர் சட்டவிரோதமாக உறிஞ்சப்படுவதை எதிர்த்து சிவமுத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்ற உத்தரவுபடி 15% நீரை மக்கள் பயன்பாட்டிற்கு இலவசமாக ஏன் வழங்கவில்லை?  எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவை 143 நிறுவனங்கள் மட்டுமே செயல்படுத்தி உள்ளதாக தமிழக அரசு தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. நிலத்திலிருந்து எடுக்கப்படும் நீரின் அளவை கணக்கிடும் கருவி பொருத்த கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அனுமதி இல்லாமல் இயங்கும் நீர் நிறுவனங்களும், அனுமதி பெற்று இயங்கும் நீர் நிறுவனங்களும் சட்ட விரோதமாக நிலத்தடி நீரை எடுத்து வருவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனுமதி பெறாமல் இயங்கும், குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத, மாவட்ட கலெக்டர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், தண்டல் கழனி கிராமம், சென்னையில், வடகரை, வடபெரும்பாக்கம், மாதவரம் பகுதிகளில் சில நிறுவனங்கள் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கின்றன. நிலத்தடி நீர் சென்னையில்  சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்து கேன்களில் நிரப்பி விற்பனை செய்கின்றன என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : ICC ,water companies , Illegal, Water Company, Strict Action, iCourt
× RELATED ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது