×

மூன்று கால்களுடன் பிறந்த குழந்தை : உத்தரபிரதேசத்தில் ஆச்சரியம்

காசிப்பூர், :உத்தரபிரதேசத்தில் மூன்று கால்களுடன் பிறந்த குழந்தையை காசிப்பூர் பகுதிமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டம் தியாரா கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான பிரியங்கா தேவி என்பவர் கடந்த செப். 29ம்  தேதி படோபூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, சில நாட்களுக்கு முன் மூன்று கால்களுடன் கூடிய ஆண் குழந்தை பிறந்தது. மூன்றாவது கால், அந்த குழந்தையின்  பிறப்புறுப்புகளுடன் தனியாக இணைக்கப்பட்டுள்ளது. கால்களில் தலா ஆறு  விரல்கள் உள்ளன. பிறந்த குழந்தை சாதாரணமாக தனது தாயிடம் பால்  குடித்தது. இந்த குழந்தையை தெய்வீக  அவதாரம் என அந்த கிராம மக்கள் ஆச்சரியமுடன் பார்த்து வருகின்றனர்.

ஆனால், குழந்தையின் தந்தை விவேகானந்தர் ராம் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், தனது குழந்தைக்கு சிகிச்சையளிக்க அவர்களிடம்  பணம் இல்லை. குழந்தைக்கு சிகிச்சையளிக்க உதவுமாறு மக்களிடம்  வலியுறுத்தி வருகிறார். இதுகுறித்து மருத்துவமனை ஏ.சி.எம்.ஓ உமேஷ்குமார், ‘இது ஒரு வகையான நோய். பிறவி ஒழுங்கின்மை என்று  அழைக்கப்படுகிறது. பரிசோதனைக்கு பின்னரே சிகிச்சையால்  குணப்படுத்த முடியும். கர்ப்பிணிப் பெண், மின்னல் போன்ற கதிர்வீச்சுடன்  தொடர்பில் இருந்திருக்கலாம். அல்லது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் குறிப்பிட்ட சில மருந்துகள் சாப்பிட்டு இருக்கலாம்’ என்றார்.



Tags : Baby ,Uttar Pradesh , Three legs, baby, Uttar Pradesh, surprise
× RELATED பச்சிளம் ஆண் குழந்தை கொல்லப்பட்ட...