×

ஹத்ராஸ் கொடூரம்: இந்­தி­யா­வில் பின்­தங்­கிய சமூ­கத்­தைச் சேர்ந்த பெண்­களும் சிறு­மி­க­ளும்­தான் பாலியல் வன்­கொடுமைக்கு அதி­கம் ஆளா­கு­தாக ஐ.நா.கவலை!!

டெல்லி : இந்­தி­யா­வில் பின்­தங்­கிய சமூ­கத்­தைச் சேர்ந்த பெண்­களும் சிறு­மி­க­ளும்­தான் பாலின அடிப்­ப­டை யிலான வன்­மு­றைக்கு அதி­கம் ஆளா­வ­தாக இந்­தி­யா­வுக்­கான ஐ.நா. அதி­கா­ரி­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பாஜக ஆளக்கூடிய உத்தர பிரதேச மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் தொடர்ந்து பாலியல் கொடூரத்திற்கு உள்ளாகி உயிரிழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. அவ்வகையில், “2018ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 3,78,236 வழக்குகள் பதிவாகி இருந்தது. இதுவே, 2019ம் ஆண்டில் 4 லட்சமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்களை எடுத்துக் கொண்டால், 2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2019-இல் 7.3 சதவிகிதமும், பழங்குடியினர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 26 சதவிகிதம் வரையும் அதிகரித்துள்ளது.தலித் பெண்களுக்கு எதிராக பதிவாகி இருக்கும் மொத்த வழக்குகளில் உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 11,829 வழக்குகள் பதிவாகியுள்ளன என தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹாத்ரஸில் பட்டியலின இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம் தற்போது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்தியாவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இது­தொ­டர்­பாக வெளி­யிட்­டுள்ள அண்­மைய அறிக்­கை­யில், பாலி­யல் குற்­றங்­களில் ஈடு­ப­டுபவர்­கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்ற பிர­த­மர் மோடி­யின் அழைப்பை ஆதரிக்கிறோம்.பின்­தங்­கிய சமூக குழுக்­க­ளைச் சார்ந்த பெண்­களும் சிறுமி­களும்­தான் அதி­கம் பாதிக்­கப்­படு­கி­றார்­கள் என்­ப­தற்கு ஹத்­ராஸ் மற்­றும் பல­ராம்­பூ­ரில் அண்­மை­யில் நடந்த பாலி­யல் பலாத்­கார மற்­றும் கொலை சம்­ப­வங்­கள் சாட்சிக­ளாக உள்­ளன.பாலின அடிப்­ப­டை­யி­லான வன்­மு­றை­யால் பாதிக்­கப்­ப­டு­வ­தில் பின்­தங்­கிய சமூ­கத்­தி­னர் அதிக ஆபத்­தில் உள்ளனர் என்­பதை அண்­மைய சம்­ப­வங்­கள் நினை­வூட்­டு­கிறது. பெண்­கள் மற்­றும் சிறு­மி­க­ளுக்குப் பாது­காப்பு வழங்க இந்­திய அரசு மேற்­கொண்­டுள்ள நட­வ­டிக்­கை­களை வரவேற்கிறோம். எனி­னும் அவை மேலும் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட வேண்­டும்< என்­று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : UN ,women ,communities ,girls ,India , Hathras, Atrocities, India, Women, Sex, Violence, UN, Concern
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...