இன்று மாலை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் நேரில் சென்று சந்திக்கிறார் முதல்வர் ஈபிஎஸ்: வாழ்த்து தெரிவிக்க உள்ளதாக தகவல்

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை இன்று மாலை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். எனவே ஓ.பி.எஸ்.ஸை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதல்வர் வேட்பாளராக ஈ.பி.எஸ். அறிவிக்கப்பட்ட நிலையில் சந்திப்பு நடைபெறுவதாக தகவல் கூறப்பட்டுள்ளது. இன்று காலை அதிமுக கட்சி அலுவலகத்தில் 2021-ம் ஆண்டு அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமாக ஓபிஎஸ் அறிவித்தார்.

மேலும் கட்சியின் 11 பேர் கொண்ட வழிக்காட்டு குழவும் அமைக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் பங்கேற்றனர். அதை தொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு பேட்டியளித்த துணை முதல்வர் ஓபிஎஸ் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி பெயரை நான் மகிழச்சியோடு அறிவித்தேன் என பேட்டியளித்தார்.

Related Stories:

>