×

வடமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு லாரிகளில் அடைத்து கொண்டு வரப்பட்ட மாடுகள் மீட்பு: டிரைவர்கள் மீது வழக்கு

அவிநாசி: வடமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு லாரியில் அடைத்து கொண்டு வரப்பட்ட 67 மாடுகளை போலீசார் மீட்டனர். கேரள மாநிலம் கோட்டயம் மற்றும் கொச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு இறைச்சிக்காக வடமாநிலங்களில் இருந்து 67 மாடுகளை ஏற்றிக் கொண்டு  இரண்டு லாரிகள் கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது.  
பெருமாநல்லூரை அடுத்த காளிபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது இதுகுறித்து தகவல் அறிந்த சிவசேனா கட்சியின் மாநில  இளைஞரணி துணைத்தலைவர் அட்சயா தலைமையிலான நிர்வாகிகள் 2 லாரிகளையும் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெருமாநல்லூர் போலீசார், விசாரணை நடத்தியதில் ஆந்திராவில் இருந்து 29 மாடுகளை  ஏற்றிக்கொண்டு ஒரு லாரியும், அரியானாவில் இருந்து 38 மாடுகளை ஏற்றிக் கொண்டு மற்றொரு லாரியும் வந்தது தெரியவந்தது. இதையடுத்து  இருலாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். லாரிகளில் இருந்த அனைத்து மாடுகளையும் பெருமாநல்லூர் கால்நடை மருத்துவமனையில்  மருத்துவ பரிசோதனை செய்த பின் கோவை அருகே உள்ள கோசாலைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து லாரி டிரைவர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்த முகமது ஹுசேன் (42), ஆந்திராவை  சேர்ந்த மல்லையா (29) ஆகிய இருவர் மீது  மிருகவதை தடுப்பு சட்டத்தின்கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.Tags : drivers ,Northern States ,Kerala , From the Northern States to Kerala Recovery of cows stuffed in trucks: case against drivers
× RELATED 107 வயது முதியவர் மீட்பு