×

வலங்கைமானில் நூறாண்டை கடந்த விரிசலான கட்டிடத்தில் இயங்கும் காவல் நிலையம்: திக்... திக்... பணியில் காவலர்கள்

வலங்கைமான்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாசில்தார் அலுவலகம், வேளாண் துறை  அலுவலகம், புள்ளியியல் அலுவலகம், சட்டமன்ற அலுவலகம் மற்றும் காவல் நிலையம் ஆகியவை ஒரே பகுதியில் அருகருகே செயல்பட்டு வந்தன.  இதில் தாசில்தார் அலுவலகம் மற்றும் வேளாண் துறை அலுவலகம் ஆகியவை தனித்தனியே புதிய கட்டிடம் கட்டபப்பட்ட நிலையில்  அக்கட்டிடத்திற்கு இடம் பெயர்ந்தது.இதில் காவல்நிலையம் நீங்கலாக ஏனைய அலுவலகங்கள் சமீபகாலங்களில் கட்டப்பட்ட கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. கடந்த 1914ம் ஆண்டு  கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தின் ஒருப்பகுதி மரம் மற்றும் ஓடுகளாலும் மற்றொறு பகுதி சுமார் 600 சதுரஅடி கான்கிரீட்டால் (மர ஒட்டு) அமைய  பெற்றதாகும். ஓட்டினால் அமைக்கபட்ட பகுதி ஓரளவு நல்ல நிலையிலும், கான்கிரீட்டால் அமைக்கப்பட்ட பகுதி சேதமடைந்த நிலையிலும் உள்ளது.

இக்கட்டிடத்தில் ஆயிரத்து 927ம் ஆண்டு முதல் தற்போதுவரை ஒரே இடத்தில் வலங்கைமான் காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது. கட்டித்தின்  மேல் பகுதியில் பல இடங்களில் விரிசல் விட்டும் மழைக்காலங்களில் மழைநீர் கசியும் விதத்தில் உள்ளது- .மேலும் கட்டிடத்தின் மேற்பரப்பில் முளைத்துள்ள செடிகளின் வேர்கள் கட்டிடத்தின் உட்பகுதி வரை சென்றுள்ளது. கட்டிடம் நூறு ஆண்டை கடந்ததால்  வலு விழந்ததை அடுத்து வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் காலங்களில் மழைநீர் உள்ளே புகுந்து கட்டிடத்தின் மேற்பரப்பின் எடையை பலமடங்கு  அதிகரித்து விடுகிறது.

இதன் காரணமாக காவல் நிலையத்தின் கான்கிரீட்டால் ஆன மேற்கூரை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய  சூழ்நிலை உள்ளது. மேலும் காவல் நிலையத்தில் உள்ள பதிவேடுகள் தொடர் மழைக்காலத்தில் வீணாகி விடும் நிலை உள்ளது. காவலர்கள்  அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.எனவே புதிய கட்டிடம் கட்டும் வரை தற்காலிகமாக காவல் நிலையம் செயல்பட வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன் தாசில்தார் அலுவலகம்  மாற்று இடத்தில் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Police station ,building ,Guards ,Valangaiman , Police station operating in a dilapidated building over the past century in Valangaiman: Dik ... Dik ... Guards on duty
× RELATED கம்பம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்