×

மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி :36 அமைச்சர்கள், 150 எம்எல்ஏக்கள் வீடுகள் இருட்டில் மூழ்கியது; உ.பி-யில் விடிய விடிய மின் விநியோக தடையால் அவதி!!!


லக்னோ, :உத்தரபிரதேச மின் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தினால் மின்விநியோகம் நேற்றிரவு முழுவதும் நிறுத்தப்பட்டது. இதனால், துணை முதல்வர் உட்பட 36 அமைச்சர்கள், 150 எம்எல்ஏக்கள் வீடுகள் இருட்டில் மூழ்கின. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்கிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் மின்சாரத் துறையை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று மின் விநியோகம் வழங்கப்படாததால், லட்சக்கணக்கான வீடுகளில் வசிக்கும் மக்கள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகினர். தலைநகர் லக்னோவில் உள்ள துணை முதல்வர் மற்றும் எரிசக்தி அமைச்சர் உட்பட மொத்தம் 36 அமைச்சர்கள், 150 எம்எல்ஏக்கள் வீடுகளுக்கும் மின்சாரம் விநியோகம் செய்யப்படவில்லை. அனைத்து அமைச்சர்களின் வீட்டிலும் இருள் சூழ்ந்த நிலையே நீடித்தது. நேற்றிரவு வரை மின் விநியோகம் செய்யாததால், மக்கள் இரவில் தெருக்களில் நடந்து செல்வதைக் காண முடிந்தது.

மின்வாரியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, லக்னோ முதல் நொய்டா வரையிலும், மீரட் முதல் வாரணாசி வரையிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 10 முதல் 16 மணி நேரம் மின்வெட்டு உள்ளது. பிரயாகராஜ், லக்னோ, வாரணாசி உள்ளிட்ட பல பெரிய நகரங்களின் மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். அதே நேரத்தில், ஜான்பூர், அசாம்கர், காசிப்பூர், மவு, பல்லியா, சாண்டவுலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மின்விநியோகம் நேற்று காலை 9 மணி முதல் நிறுத்தப்பட்டதால், மக்கள் விடியவிடிய அவதிக்கு ஆளாகினர். மின்சார துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால், பல இடங்களில் தொழிலாளர்களுக்கு எதிராக மக்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதனால், மின் தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் இடையே சில இடங்களில் மோதல்கள் நடந்தன.
மாநிலத்தில் மின் விநியோக நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து, மின்சார ஊழியர்கள் சங்கங்களுடன் எரிசக்தி அமைச்சர் காந்த் சர்மா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பூர்வஞ்சல் வித்யுத் வித்ரான் நிகத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தை திரும்பப் பெறுவதாக எரிசக்தி அமைச்சர் காந்த் சர்மா அறிவித்தார். அதனால், இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

ஆனால், உத்தரபிரதேச மாநில பவர் கார்ப்பரேஷனுக்கும், மின் ஊழியர்களுக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை. மின் ஊழியர் தொடர்பான ஒப்பந்தம் குறித்து அரசுக்கு கால அவகாசம் தேவை என்று கூறப்பட்டதால், மின் ஊழியர்கள் சங்கங்கள் அதிருப்தி அடைந்தன. அதனால், மின் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.



Tags : strike ,Houses ,ministers ,Vidya Vidya , Electrical workers, strike, echo, houses, power supply, ban
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து