×

24ல் 7 சீட் குடும்பத்துக்கு..! பீகாரில் லாலு கட்சியில் கலகலப்பு

பாட்னா, :பீகாரில் பேரவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் அறிவித்த 24 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலில், 7 வேட்பாளர்கள் கட்சித் தலைவர்களின் மனைவி, மகள், மகன்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பீகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல்கள் நடைபெற உள்ளன. முதற்கட்ட வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்ட நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 24 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில், லாலுவின் மகனான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஷ்வி யாதவ் வெளியிட்டுள்ள 24 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலில், கட்சியின் முக்கிய தலைவர்களின் மனைவிகள், மகன்கள் மற்றும் மகள்கள் என, 24 பேரில் ஏழு பேருக்கு சீட் ஒதுக்கி உள்ளார். இது, அம்மாநில அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதால், சிபிஐக்கு ஆறு இடங்களும், சிபிஐ (எம்) நான்கு இடங்களும், ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு 144 இடங்களும், காங்கிரசுக்கு 70 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.Tags : Lalu ,Bihar , Bihar, Lalu Party, lively
× RELATED குடும்பம் என்கிற அமைப்பு எல்லோருக்கும் வேண்டும்!