×

ஃப்ளைட் ஹோட்டல்

நன்றி குங்குமம்

பளபளக்கும் வெள்ளைச் சுவர்கள், அல்ட்ரா மாடர்ன் இருக்கைகள், வானத்துக்கு அருகில் இருப்பதைப்போன்ற உணர்வைத் தரும் ஜன்னல் ஓவியங்கள், விதவிதமான சுவையான உணவுகள் என கெத்து காட்டுகிறது ஃப்ளைட் ஹோட்டல். கடந்த மாதம் நைஜீரியாவில் திறக்கப்பட்ட இந்த ஹோட்டலுக்கு தினமும் குறைந்தபட்சம் நூறு வாடிக்கையாளர்களாவது வருகிறார்கள். நைஜீரியாவில் மார்ச் மாதத்திலிருந்தே விமானங்கள் ஓடுவதில்லை. ஹோட்டல்கள் இயங்கினாலும் கொரோனா பீதியால் வாடிக்கையாளர்கள் பெரிதாக வருவதில்லை. அதனால் நிறைய ஹோட்டல்கள் மூடப்பட்டுவிட்டன.

புதிதாக ஏதாவது செய்தால் மக்கள் வருவார்கள் என்று நினைத்த யங், விமானத்தில் பயணிப்பதைப் போன்ற ஓர் அனுபவத்தைத் தரும் ஹோட்டலை உருவாக்கிவிட்டார். விமானத்தைப் பிரதிபலிக்கும் உள்கட்டமைப்பை வடிவமைக்க மட்டுமே ரூ.20 லட்சம் செலவாகியிருக்கிறது. விமானத்தில் இருப்பதைப் போலவே மெனுவும், வாடிக்கையாளர் சேவையும் இருப்பது ஹைலைட்.

தொகுப்பு: த.சக்திவேல்

Tags : Flight Hotel , Flight Hotel
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...