கர்நாடக காங்கிரஸ் எம்.பி டி.கே.சுரேஷூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்வீட்டர் பக்கதில் பதிவு

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் எம்.பி டி.கே.சுரேஷூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எனக்கு அறிகுறிகள் அற்ற கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அவரது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எனவே நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டடுள்ளேன் எனவும் கூறினார். மேலும் கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்த உறவினர்கள், நண்பர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளார். கர்நாடக மாநில‌ காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் அவரது சகோதர‌ருக்கு சொந்தமான 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

நேற்று முன்தினம் சுமார் 14 மணி நேரமாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இந்நிலையில் சோதனை நடத்திய மறுநாள் தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக அவர் அறிவித்தது அதிகாரிகளிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல என் வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகளும் மற்றும் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர்களும் கொரோனா பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த மாதம் கொரோனா தொற்றுக்கு ஆளான ‌‌டி.கே. சிவகுமார் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினார்.

Related Stories:

>