சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை: அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை செலுத்தினர். முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை அடுத்து நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். கடந்த சில நாட்களாகவே முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகள், மூத்த அமைச்சர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து இன்று காலை 9 மணியளவில் முதல்வரும், துணை முதல்வரும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். அதிமுக சார்பில் வரும் 2021- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்  முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவார் என துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அதேபோல் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

Related Stories:

>