×

ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். கூட்டாக அமைத்துள்ள வழிகாட்டு குழுவில் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் புறக்கணிப்பு: 11 பேரில் 5 பேர் தான் பன்னீர்செல்வம் தரப்பினர்

சென்னை: எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். கூட்டாக அமைத்துள்ள வழிகாட்டு குழுவில் மூத்த தலைவர்கள் புறக்கணித்துள்ளனர். எம்.ஜி.ஆர். காலத்து தலைவர்களான பண்ருட்டி ராமசந்திரன், அன்வர்ராஜா, நத்தம் விஸ்வநாதனுக்கு குழுவில் இடமில்லை. முன்னாள் அமைச்சர் செம்மலை, அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன், செங்கோட்டையனுக்கு இடம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.  

அதிமுக வழிகாட்டு குழுவில் ஒபிஎஸ்-க்கு பின்னடைவு:
அதிமுக வழிகாட்டு குழுவில் உள்ள 11 பேரில் 5 பேர் தான் பன்னீர்செல்வம் தரப்பினர் என கூறப்படுகிறது. ஓபிஎஸ் தரப்பில் ஜே.சி.டி பிரபாகர், கோபாலகிருஷ்ணன், ப.மோகனுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. மனோஜ் பாண்டியன், எம்எல்ஏ மாணிக்கத்துக்கு வழிகாட்டு குழவில் ஓபிஎஸ் தரப்பினருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஈபிஎஸ் தரப்பை சேர்ந்த 6 பேர் வழிகாட்டு குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

மூத்த தலைவர் புகழேந்தி கருத்து:

அதிமுக வழிகாட்டுக் குழுவுக்கு உரிய அதிகாரம் கிடைக்குமா என்பது போகப் போகத் தெரியும் என 11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டுக் குழு குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் புகழேந்தி கருத்து தெரிவித்தார்.

தங்க.தமிழ்செல்வன் கருத்து:


2021-ல் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என திமுக நிர்வாகி தங்க.தமிழ்செல்வன் கருத்து தெரிவித்தார். எடப்பாடி குழுவினரும், ஒபிஎஸ் குழுவினரும் தேர்தலில் ஒருவொருக்கு ஒருவர் எதிராகவே வேலை செய்வார்கள் என கூறினார். தற்போது அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டு குழுவால் அதிமுகவில் புதிய குழப்பம் ஏற்படும் என கூறினார்.

பீட்டர் அல்போன்ஸ் கருத்து:

முதல்வர் வேட்பாளரை அறிவித்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று அர்த்தமில்லை என பீட்டர் அல்போன்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். மாநிலத்துக்கு உரிய வரி வருவாயை  கூட அதிமுக அரசால் வாங்கி தர முடியவில்லை என கூறினார். மூழ்கப்போகும் கப்பலுக்கு கேப்டன் யாராக இருந்தால் என்ன என்று கூறினார்.


Tags : OPS ,senior leaders ,ministers ,steering committee , EPS, OPS , Committee, senior leaders, ministers, boycott
× RELATED பா.ஜ.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகளை ஏற்பது?-ஓ.பி.எஸ்.ஸுக்கு அதிகாரம்