×

57 லட்சம் பேர் பாதிப்பு..1.04 லட்சம் பேர் பலி.. இந்தியாவில் கொரோனா நோயில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 85%-ஐ தாண்டியது!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.04 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 67 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக   பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 72,049 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67,57,132 ஆக உயர்ந்தது.
* புதிதாக 986 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,04,555 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 75,787 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 57,44,694 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,07,883 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 85.02% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.55% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 13.44% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 11,99,857 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
* இதுவரை 8,22,71,654 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

*கொரோனா பாதித்தோர் அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், ஆந்திரா 2-வது இடத்திலும், கர்நாடகா 3-வது இடத்திலும், தமிழ்நாடு 4-வது இடத்திலும் இருந்து வருகிறது.

மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!

மகாராஷ்டிரா : சிகிச்சை பெறுவோர் :247468; குணமடைந்தோர் : 1179726; இறப்பு :  38717

தமிழகம் : சிகிச்சை பெறுவோர் :45279 ; குணமடைந்தோர் :  575212 ; இறப்பு : 9917

டெல்லி : சிகிச்சை பெறுவோர் : 22720 ; குணமடைந்தோர் :   266935 ; இறப்பு :  5581
     
கேரளா : சிகிச்சை பெறுவோர் :87823 ; குணமடைந்தோர் :  154092 ; இறப்பு :  884

கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் : 115170; குணமடைந்தோர் :533074 ; இறப்பு :  9461

ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் :50776; குணமடைந்தோர் :672479 ; இறப்பு :  6052

Tags : survivors ,India , India, Corona, survivors, rate
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!