சன்ரைசர்ஸ் அணியில் புவிக்கு பதிலாக பிரித்வி ராஜ் யார்ரா

துபாய்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணயில் இருந்து காயம் காரணமாக விலகிய புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இளம் வீரர் பிரித்வி ராஜ் யார்ரா சேர்க்கப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்(30), தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு தொடரில் இருந்து விலகியுள்ளார். அதனையடுத்து, அவருக்கு பதிலாக ஆந்திராவை சேர்ந்த இளம் வீரர் பிரத்வி ராஜ் யார்ரா (22) சேர்க்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில்தான் வேகப்பந்து வீச்சாளரான பிரித்வி ராஜ் அறிமுகமானார்.

அந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அவர் விளையாடினார். அப்போது அறிமுக வீரரான அவர் ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக 2 போட்டிகளில் மட்டுமே விளையாடி ஒரு விக்கெட் வீழ்த்தினார். அந்த ஒரு விக்கெட்டும் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக முதல்தர போட்டிகளில் ஆந்திர அணிக்காக களம் கண்டுள்ள பிரித்வி ராஜ் 39 விக்கெட் எடுத்துள்ளார். ஏற்கனவே சன்ரைசர்ஸ் அணியில் இருந்து காயம் காரணமாக விலகிய ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் அணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>