×

ஆப்கன். கிரிக்கெட் வீரர் சாலை விபத்தில் மரணம்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வீரர்  நஜீப் தரகாய் (29). இவர் நேற்று முன்தினம் ஷாப்பிங் செய்வதற்காக சாலையை கடந்துள்ளார். அப்போது வேகமாக வந்த கார் மோதியதில் படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆப்கனுக்காக 2014ம் ஆண்டு சர்வதேச அரங்கில் நஜீப் அறிமுகமானார். கூடவே ஒரு ஒருநாள், 12 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். டி20 போட்டியில் அதிகபட்சமாக 90 ரன் எடுத்துள்ளார். முதல் தர கிரிக்கெட் போட்டியில் அதிகபட்சமாக இரட்டை சதம் அடித்துள்ளார்.

Tags : Afghan ,Cricketer ,road accident , Afghan. Cricketer dies in road accident
× RELATED சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு