×

எரிசக்தி அமைச்சகத்துடன் பவர்கிரிட் நிறுவனம் ஒப்பந்தம்

சென்னை: எரிசக்தி அமைச்சகத்துடன், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நடப்பு 2020-21 நிதியாண்டுக்கான இந்த ஒப்பந்தத்தில் மத்திய எரிசக்தி துறை செயலாளர் சஞ்சீவ் நந்தன் சகாய் மற்றும் பவர்கிரிட் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கே.ஸ்ரீகாந்த் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். நிதி மற்றும் திட்ட செயலாக்கம் தொடர்பான பல்வேறு இலக்குகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பவர்கிரிட், மகாரத்னா அந்தஸ்து பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் 1993-94ல் கையெழுத்தானது.


Tags : Ministry of Energy , Powergrid Company Agreement with the Ministry of Energy
× RELATED மத்திய அரசின் எரிசக்தி அமைச்சகம்...